Posts

கஅபா வரலாறு

கஅபா வரலாறு எம். ஷம்சுல்லுஹா கொலை, கொள்ளை, கற்பழிப்பு, களேபரம், போர், குண்டு வெடிப்பு என உலகத்தின் அனைத்துப் பகுதிகளும் அமளி துமளியாகி அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் உலகின் ஒரேயொரு ஊர் மட்டும் அமைதியிலும் அடக்கத்திலும் ஆழ்ந்திருக்கின்றது. சுற்றி எரியும் பயங்கர பாவத் தீ அங்கு மட்டும் பற்றாமல், பரவாமல் எப்படித் தள்ளி நிற்கின்றது? அந்தத் தீயை விட்டும் அந்த ஊர் தன்னை மட்டும் எப்படித் தற்காத்துக் கொண்டு தனித்து நிற்கின்றது? சுற்றி எரியும் நெருப்பு வளையத்தின் நடுவே சுண்டைக்காய் அளவிலான அந்தப் பகுதி மட்டும் பற்றி எரியாமல் பத்திரமாக இருக்கின்றது. அந்தப் பகுதி எது? மானுட குலத்திற்கு வழிகாட்டும் அந்த மண்ணின் மகுடம் எது? அது தான் முதல் ஆலயத்தைத் தன்னகமாகக் கொண்ட புனித மக்கா நகரமாகும். மங்காத புகழ் கொண்ட அந்த மக்காவின் அற்புதத்தைத் தான் அல்குர்ஆன் அகில உலகத்தை நோக்கிப் பார்க்கச் சொல்கின்றது. இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அ...